Published Date: August 9, 2024
CATEGORY: CONSTITUENCY
மாமதுரை திருவிழாவில் இரண்டடுக்கு பேருந்தில் ஜாலியாக பயணித்த பள்ளி மாணவிகள்.
யங் இந்தியன் சார்பில் மதுரையில் ஆகஸ்ட் 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறும் மாமதுரை விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வானொலி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொல்லியல் பயணம், மதுரை கலை திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்து பயணம், பலூன் திருவிழா, உணவு திருவிழா, வானவேடிக்கை நிகழ்ச்சி, கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
இந்த மாமதுரை திருவிழா பிரச்சாரத்திற்காக இரண்டு அடுக்கு பேருந்தை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.
Media: Tamil Sudar